தமிழ் சினிமாவிற்கு 1983ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஊர்வசி. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

கடைசியாக இவரது நடிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை ஊர்வசி அடுத்ததாக நடிக்க உள்ள தன்னுடைய 700வது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரியதர்ஷனின் இயக்கத்தில் ஊர்வசி நடிக்கவுள்ளார். ‘அப்பத்தா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, இயக்குநர் பிரியதர்ஷன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘மிதுனம் படைப்பிற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் வேலை செய்யவுள்ள ‘அப்பத்தா’ படம், தமிழ் சினிமாத் துறையில் ஊர்வசிக்கு 700 வது படமாகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWa7sqavP76/