ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தன் மனைவியை பற்றி அவதூறு செய்திகளை ஆளும் கட்சி தலைவர்கள் பரப்புவதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு சட்டசபையில் பல முறை என்னை பற்றி தப்பாக பேசியுள்ளார் நான் ஆபாச படத்தில் நடித்தவர் என்று கூறி சி டி ஒன்றை சட்டசபை கூட்டத்தொடரில் எடுத்து வந்தார். அவருடைய ஆட்சியில் என்னை சட்டசபைக்கு ஓராண்டுக்கும் மேலாக வர முடியாதபடி செய்தார்.

இப்போது உங்களையும், உங்கள் குடும்ப பெண்களையும் தவறாக பேசியதற்காக நீங்கள் கண்ணீர் விட்டு கதறுகிறீர்கள். உங்கள் வீட்டில் மட்டும் தான் பெண்கள் இருக்கிறார்களா உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது இனி நீங்கள் எப்போதும் சட்ட சபைக்கு வரவே முடியாது. விதி யாரையும் விட்டுவைப்பதில்லை என்று ரோஜா தெரிவித்துள்ளார்.