ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கியது. நவம்பர் 28ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.

ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன. IFFI கடந்த 5 தசாப்தங்களாக உள்ளது.

இந்த விழாவில் ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் (Satyajit Ray Life Time Achievement Award) விருது வழங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய `ஸ்வீட் பிரியாணி’ இடம்பெற்றுள்ளது.