சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதி செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்  அமெரிக்கா சென்று வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,  அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.