தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இருவரும் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விவாகரத்திற்கு பிறகு நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதில் பிசியாக உள்ள சமந்தா, அண்மையில் கூட ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி சென்னையில் துவங்கியுள்ள ‘ஸ்பா’ வை சமந்தா நேரில் வந்து திறந்து வைத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், உன்னுடைய அனைத்து சாதனைகளையும் கொண்டாடுவதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ‘deepskindialogues’ மிகவும் அருமையாக இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள் பாப்பா என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWexCNlhXzn/