தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இருவரும் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா பதிவு செய்துள்ளார். கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CWfAmxWpayV/