ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.

அவர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து லோஹிதா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் கார்த்திகேயா, லோஹிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

அண்மையில் நடந்த ராஜ விக்ரமார்கா விழாவில் தான் லோஹிதாவுக்கு ப்ரொபோஸ் செய்தார் கார்த்திகேயா. நான் லோஹிதாவை பல ஆண்டுகளாக காதலித்தபோதிலும் இந்த நிகழ்ச்சியில் தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்கிறேன் என்றார்.