நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்த போஸ் வெங்கட் சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘கன்னி மாடம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்குப் போதிய ஆதரவு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் போஸ் வெங்கட்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த புதிய படத்தில் ‘உறியடி’ இயக்குநர் விஜயகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இதில் விஜயகுமாருக்குத் தந்தையாக பசுபதி நடிக்கிறார். மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.