டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் கே.என்.நேரு

Must read

தூத்துக்குடி: டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தூத்துக்கு மாவட்டத்தில் ஆய்வுபணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து,  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்,  தூத்துக்குடி நகரின் மத்தியில் ரூ.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பழைய பேருந்து நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டு, இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து, மீளவிட்டான் பகுதியில்மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள சி.வ. குளத்தில் 11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளான கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாயை சீர்செய்தல், குளம் தூர்வாருதல்  உங்ளபட சி.வா.குளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், இங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.  விரைவாக இந்த பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

பின்னர்  செய்தியாளரிடம் பேசிய கே.என்.நேரு, “தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், அதை கடந்த ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட காரணத்தால் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால்,‘ பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. . இன்னும் மூன்று நான்கு மாதங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும்.

இதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

தி.மு.க தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. சில பகுதியில் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். தமிழ்நாட்டில் பருவமழை காலம் என்பதால், அது நிறைவு பெற்றதும் தேர்தல் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article