டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 39,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 546 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா எண்ணிக்கை 3,13,32,159 -ஆக உயா்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவிகித்திற்கும் கீழ் உள்ளது. தற்போது இது 2.22 சதவிகிதமாக உள்ளது

தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 546 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை மொத்த உயிரிழப்பு 4,20,016-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 35,087 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,05,03,166 பேர் குணமடைந்துள்ளனர். ணமடைந்தோரின் விகிதம் 97.35 சதவிகிதமாக உள்ளது

தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,08,977-ஆக உள்ளது இது மொத்த வழக்குகளில் 1.31 சதவிகதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  42,78,82,261 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,45,70,811 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 16,32,266 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.