டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன், டென்னிஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி

Must read

டோக்கியோ: ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

அதுபோல, ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில்,  ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீர‌ர் சுமித் நாகல் வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியுங்ளளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.  உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினை 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுமித் நாகல் வீழ்த்தியுள்ளார்.

அதுபோல  ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி – ஆண்கள் இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் செட்டி ஜோடி, சீனா தைபேவை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

More articles

Latest article