சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் துணைமுதல்வரும், எதிர்க்கட்சி துணை தலைவரும், அதிமுகவின்   ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்  மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிச்செல்வம் 6 நாட்களும் ஓபிஎஸ் 8 நாட்களும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழகத்தில் வரும் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வரும் பிப்.7 முதல் பிப்.15-ம் தேதி வரை பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேங்ன.

அதன்படி, வரும் பிப்.7-ம் தேதி காலை 8.30 மணிக்கு சிவகாசியிலும், பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலிலும், பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியிலும், மாலை 5 மணிக்கு தூத்துக்குடியிலும் அதிமுக சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

இதனைத்தொடர்ந்து பிப்.8-ம் தேதி காலை 9 மணிக்கு மதுரையிலும், காலை 11.30 மணிக்கு திண்டுக்கல்லிலும், பிற்பகல் 3 மணிக்கு கரூரிலும், மாலை 5.30 மணிக்கு திருச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதே போல், வரும் பிப்.10-ம் தேதி, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடியிலும், பிப்.11 வட சென்னை, தென் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளிலும், பிப்.14-ம் தேதியன்று கோவை, திருப்பூர், ஈரோட்டிலும், பிப்.15-ம் தேதி கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கு பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றுமுதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காஞ்சிபுரத்தில் பிரசார பயணத்தை தொடங்கும் ஓபிஎஸ், வரும் 15ந்தேதி வரை விருதுநகர், மதுரையில் இறுதி பிரசாரம் மேற்கொள்கிறார்.