சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று  இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில செயலாளர் முத்தரசன்  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய  பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள். இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில், சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின்  பட்டியலை  மாநில செயலாளர் முத்தரசன்  வெளியிட்டுள்ளார்.

தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ். ஏழுமலை (வார்டு 193), எம். ரேணுகா (வார்டு 42) ஆர். விஜயகுமார் (வார்டு 84) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 7,11,23,27,31, 37, 54 வார்டுகள் , மற்றும் மதுரை மாநகராட்சியின் 26வது வார்டு, கும்பகோணம் மாநகராட்சியின் 7வது வார்டு, தூத்துக்குடி மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 23வது வார்டு, ஈரோடு மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 11வது வார்டு, சேலம் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 21வது வார்டு, ஓசூர் மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 26,19,7,24 வார்டுகள் மற்றும்  தஞ்சை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட 15 உள்ளிட்ட பல வார்டுகளில் போட்டியிடும்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.