டெல்லி:
த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மற்றும் இந்திய  பொருளியர் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
2021ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.  பின்னர், தேர்வு தேதி குறித்து ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) , சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகளை அறிவித்து உள்ளது.
அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.  அதைத் தொடர்ந்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16 ஆம் தேதியும் நடைபெறும்  என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், யுபிஎஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளின் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.