கலபுரகை:

வர இருக்கும் மக்களவை தேர்தலோடு தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான  காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே   அறிவித்துள்ளார்.


கர்நாடக மாநிலத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, கடந்த 1972-ம் ஆண்டு குர்மிட்கல் தொகுதி மக்கள் என்னை முதன்முதலாக 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

அடுத்த தேர்தல்களில் இந்த வெற்றி வித்தியாசம் படிப்படியாக உயர்ந்தது. இதற்கு முன்பு கலபுரகை மக்களவை தொகுதியில் 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதுவரை 11 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றேன்.

இவ்வளவு ஆண்டுகள் மக்களின் ஆசியையும் அன்பையும் பெற்றிருக்கின்றேன்.
நான் தேர்தல் அரசியலில் பங்கேற்பது இதுவே கடைசியாக இருக்கும் என்றார்.

இது குறித்து கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கும் போது, உடல் நலம் மற்றும் வயோதிகம் காரணமாகவே மல்லிகார்ஜுன் கார்கே தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தனர்.