டில்லி:

மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 2015-16ம் ஆண்டில் 7,501 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து மத்திய அரசு சாதனை படைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 2007ம் ஆண்டில் 28,706 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் தலா 18,300 கிராமங்களக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ராஜிவ்காந்தி கிராமிய வித்யுதிகரன் யோஜா திட்டத்தின் மூலம் இந்த இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கிராமப் புற வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான புள்ளி விபர அட்டவணை: