ராஜீவ்காந்தி 28வது நினைவுதினம்: வீர் பூமியில் சோனியா, ராகுல், பிரியங்கா கண்ணீர் அஞ்சலி

டில்லி:

ன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு தினம் நாடு முழுவதும் காங்கிரசாரால் அணுசரிக்ககப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டில்லியில் உள்ள  வீர் பூமியில் சோனியா, ராகுல், பிரியங்கா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

பாரத தேசத்தின் இளம்பிரதமராக பதவி ஏற்று, புதிய பொருளதாரக்கொள்கைகள் மூலம் இந்தியாவை உலக நாடு களுக்கு இணையாக உயர்த்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இருந்தார் அவர் விட்டுச்சென்ற பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இன்று அவரது நினைவு தினம் நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வரும் நிலையில், டில்லியில் உள்ள ராஜீவ் நினைவிடமான வீர்பூமியில் ராஜீவ் காந்தியின் மனைவியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, ராஜீவ் மகனும் காங்கிரஸ் தலைவருமான  ராகுல் காந்தி, ராஜீவ் மகள் பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா  மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  மலர்  தூவி மரியாதை செய்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: @priyankagandhi, Dr. Manmohan Singh, RahulGandhi, rajiv gandhi, RememberingRajivGandhi, Smt Sonia Gandhi
-=-