ரேலி

ங்களின் அந்தரங்க நிகழ்வுகளை படம் எடுத்த கணவர் மீது அவர் மனைவி வழக்கு பதிந்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் 29 அன்று அதே ஊரில் உள்ள ஒரு காண்டிராக்டரை மணம் புரிந்துள்ளார். அவர்கள் முதல் இரவு அன்று நடந்த அந்தரங்க நிகழ்வுகளை கணவர் மொபல் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். மனைவி மறுக்கவே அதை விரைவில் அழித்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் சில தினங்கள் கழித்து அந்த வீடியோ கணவரின் மொபைலில் இருந்ததைக் கண்டு மனைவி அதிர்ந்துள்ளார். உடனடியாக தானே அதை அழிக்க முயன்றுள்ளார். அதை தடுத்த அவர் கணவர் அவரை பாலியல் ரீதியாக தாக்கி உள்ளார். அவருடன் இயற்கைக்கு புறம்பான வகையில் பாலியல் உறவு கொண்டு அதையும் விடீயோ படம் எடுத்துள்ளார்.

இது போல நிகழ்வுகள் தொடர்ந்துள்ளன. அந்தப் பெண் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் இது குறித்து கூறி உள்ளார். அவர்கள் தங்கள் மகனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். அத்துடன் கணவரும் இதை வெளியில் சொன்னால் இந்த வீடியோக்களை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்த மனைவி தனது பிறந்த வீட்டில் கூட சொல்லவில்லை.

இந்த வீடியோ விவகாரத்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த மாதம் ஜூன் 30 ஆம் தேதி நடந்த சண்டையில் அந்த பெண்ணை அடித்து பிறந்த விட்டுக்கு விரட்டிய கணவர் அதன் பின் அவரைக் காண வரவில்லை. மனைவி கடந்த 7 ஆம் தேதி அன்று காவல் நிலையத்தில் அழுதபடி வந்து நடந்ததை சொல்லி உள்ளார்.

அவரது புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது குறித்து துணை ஆய்வாளர் பிரகாஷ் குப்தா, “அந்த பெண்ணின் புகார் உண்மை என தோன்றியதால் கணவர் மீது இயற்கைக்கு எதிரான குற்றங்கள், குற்றவியல் தாக்குதல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களில் வழக்கு பதிந்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி ஒரு விழா பணியில் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை தொடங்க் உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.