டெல்லி

ஓட்டல்களில் சேவை பிடிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் செலுத்த வேண்டாம் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

ரெஸ்டாரன்டுகளில் 5 முதல் 20% வரை சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களிட் இருந்து இது வலுக்கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டும் சேவை கட்டணம் செலுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஹோட்டல்கள், சேவை துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த மாநில அரசு கேட்டுக்கொள்ளப்ப்ட்டுள்ளது.

இந்த அறிவிப்பை, ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் வாடிக்கையாளர்கள் கண்களில் படும் வகையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.