உத்திரபிரதேசத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Must read

உத்திரபிரதேசம்:
பெண்களின் சுய மரியாதைக்கு தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்து, அவர் சத்தியம் செய்தபடி 19 வயது தலித் பெண்ணை வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்கு காரணமாக இருந்த, ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு, நிலைய ஆய்வாளர் மற்றும் இரண்டு அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று, தனது அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதியளித்திருப்பதாகவும், பெண்களின் சுயமரியாதைக்கு தீங்கிழைக்க நினைப்பவர்கள் கூட முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தை சார்ந்த 19 வயது தலீத் பெண் நான்கு நபர்களால் கற்பழிக்கப்பட்டு, பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாய்மார்கள் மற்றும் பெண்களின் சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும் தீங்கிழைப்பவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள், இனி அவர்களின் பாதுகாப்பு எங்கள் கையில் என்று உத்திரப்பிரதேச அரசு உறுதிபூண்டுள்ளது, இது எங்கள் தீர்மானமும் வாக்குறுதியும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article