மின் கட்டணப் பாக்கி: உ.பி. முன்னாள் முதல்வர் வீட்டுக்கு ‘பவர் கட்’

Must read

நொய்டா:

மின் கட்டணப் பாக்கி செலுத்தாததால், உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரு மான மாயாவதி வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்க சொந்தமான வீடு  உத்தபிரதேச மாநிலம் நொய்டாவின் பதல்பூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு மின் கட்டணமாக ரூ. 67 ஆயிரம் கணக்கிடப்பட்டு உள்ளது.  இந்த மின் கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிவடைந்த நிலையிலும் மின்பாக்கியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பிரச்சினையான நிலையில், இந்த சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும் எங்கெல்லாம் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதோ அந்த வீடு மற்றும் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணியை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, மாயாவதியின் குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியதால், தற்போது அவரது வீட்டுக்கு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article