உ.பி.யில் 30 குழந்தைகள் சாவுக்கு மூளை வீக்கம் தான் காரணம்!! ஆதித்யாநாத் புது விளக்கம்

லக்னோ:

மூளை வீக்கம் பிரச்னையால் குழந்தைகள் உயிரிழந்தாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூளை வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் எம்.பி. தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஆதித்யாநாத் விளக்கம் அளித்தார்.

ஆக்சிஜன் பற்றாகுறையால் குழந்தைகள் இறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனை டீன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
up: due to fatty brain 30 childrens dead cm yogi adityanath tells new reason