டில்லி:

இன்று உலக யானைகள் தினத்தை கொண்டாடும் நிலையில், இந்தியாவில் 3 ஆயிரம் யானைகள் குறை ந்திருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு 2017ம் ஆண்டின் யானைகள் கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கையை மத்திய வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வெளியிட்டார். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கண க்கெடுப்பின் சுமார் 30 ஆயிரம் யானைகள் இருந்தது.

ஆனால் தற்போது 27 ஆயிரம் யானைகள் மட்டுமே உள்ளது. எனினும் தற்போதைய கணக்கெடுப்பு பணி அறிவியல் பூர்வமாக நடத்தப்படுகிறது. அதனால் இது முதற்கட்ட தகவல் தான். அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் இறுதி அறிக்கை வெளியிடப்படும்’’ என்றார்.

மத்திய சுற்றுசூழல் துறையின் யானைகள் பிரிவு மாற்றும் மாநில வனத்துறையினரும் இணைந்து கடந்த ஆண்டு நவம்பரில் யானைகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கி, கடந்த மே மாதம் நிறைவு செய்தனர்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு போல் இல்லாமல் அறிவியல் பூர்வமாக கணக்கெ டுக்கப்பட்டுள்ளது. சானம் சிதைவு முறை, பிளாக் வாரியான எண்ணிக்கை முறை, யானை விநியோக வரைபடம், நீர் துளை எண்ணிக்கை தொழில்நுட்பம் போன்ற முறைகளில் அறிவியல் பூர்வமாக கணக்கெ டுக்கப்பட்டது.

2007ம் ஆண்டு 27 ஆயிரத்து 670 யானைகளும், 2012ம் ஆண்டில் 30 ஆயிரம் யானைகளும் இருந்துள்ளது. அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சர்வதேச யானைகள் அமைப்பு நிபுணர் சந்தீப் திவாரி கூறுகையில், ‘‘ இந்தியாவில் யானை வழிபாட்டு விலங்காக உள்ளது. எனினும் சமீப காலமாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவது கவலை அளிக்கிறது.

இதன் காரணமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விலங்குகள் தங்களது பழக்க வழ க்கங்களை விட்டுவிட்டு மக்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

கடந்த 4 ஆண்டுகளில் யானைகள் தாக்கி தினமும் ஒருவர் இறப்பதாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. 2013-14 முதல் 2016-17 வரையிலான 4 ஆண்டுகளில் ஆயிரத்து 465 பேர் யானைகள் தாக்கியதில் இறந்துளளனர். இதை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டங்கள் தீட்டி வருகிறது.

எனினும் ‘‘வளர்ச்சி மீதான அழுத்தம் இருப்பதால் இயற்கையின் பழக்க வழக்க முறை பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள்-  யானைகள் மோதலை தடுக்க தேனீக்கள் மற்றும் மிளகாய் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று யானைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.