க்னோ

த்திரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி காலத்தில் திறமையான ஆட்சி நிர்வாகம் இருந்ததாக அம்மாநில பாஜக அமைச்சர் சாமி பிரசாத் மௌரியா கூறி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்ய நாத் தலமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.   இம்மாநிலத்தில் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு 16 வயதுப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண்ணின் தந்தையை குல்தீப் சிங்கின் சகோதரர் தாக்கியதில் அவர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.  முதல்வர் யோகியின் இல்லத்தின் முன் அந்தப் பெண் தீக்குளிக்க முயன்ற பின் குல்தீப் சிங் கைது செய்யபட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிகழ்வுக்கும் காஷ்மீர் மாநில கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கும் உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.    பொதுமக்கள், எதிர்கட்சிகள் என பல தரப்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    யோகியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரான சாமி பிரசாத் மௌரியாவும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சாமி பிரசாத் மௌரியா, “பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு 16 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக வரும் செய்திகளால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.   காவல்துறை உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.   அப்படி செய்யாமல் தற்போது சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது,   இது தற்போதைய அரசின் திறமையின்மையை காட்டுகிறது.

முந்தைய மாயாவதியின் ஆட்சியில் நிர்வாகம் திறமையுடன் இருந்துள்ளது.    மாயாவதி ஊழலில் மூழ்கி இருந்தாலும் அவருடைய நிர்வாகம் திறமையுடன் நடைபெற்றது.  தற்போதைய பாஜக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்றாலும்  ஒரு சில அதிகாரிகளின் பாரபட்சத்தினால் நிர்வாகம் திறமையற்று  போய் உள்ளது”  எனக் கூறி உள்ளார்.

சாமி பிரசாத் மௌரியா இதற்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் தேசிய பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். கடந்த 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அந்த சமயத்தில் மாயாவதி அம்பேத்கார் கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாகவும் தேர்தல் தொகுதிகளை பணத்துக்கு விற்பனை செய்வதாகவும் மௌரியா குற்றம் சாட்டி இருந்தார்.