லக்னோ: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து முதலமைச்சர் நாற்காலியை யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உ.பி.சட்டமன்ற தேர்தல்2022 தீவிரமடைநதுள்ளது. அங்கு ஆட்சியில் உள்ள யோகி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் உள்பட 7 எம்எல்ஏக்கள், பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதற்கான விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ்,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் தோற்று முதலமைச்சர் நாற்காலியை இழக்கப்போவது நிச்சயம். எனவே, அவர் தனது பழைய வேலைக்கே திரும்ப தயாராகி வருகிறார். தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். விவசாயிகள் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை” என்றும் தெரிவித்து உள்ளார்.

உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.  அங்கு யோகிக்கு போட்டியாக ஒருபுறம் பிரியங்காவும், மற்றொருபுறம்  சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவும் கடும் சவாலைத் தந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாஜகவினர் பலரை தனது கட்சிக்கு இழுத்து அதிரடி காட்டி வருகிறார் அகிலேஷ் யதவ்,  கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பாஜகவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி உள்ளனர். இவர்களில் 7 பேர்  சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.