பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிறந்த நாள் – ஜனவரி 21 அன்று அவரது சகோதரி பிரியங்கா பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள அவரது ஒரு வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ருத்ராபிஷேகம் பூஜை செய்யும் வீடியோ அது .இது 2019 இல் எடுக்கப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முந்தைய வீடான காப்ரி ஹைட்ஸ் பில்டிங் பிளாட்டில் பூஜை செய்யப்பட்டது. சுஷாந்த் பின்னர் பாந்த்ராவில் உள்ள மோன்ட் பிளாங்க் குடியிருப்பில் குடியேறினார்.

https://www.instagram.com/p/B7kZf70A_JL/

அந்த வீடியோவில் அவரது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவரும் இடம்பெற்றுள்ளனர். நாசிக் பூசாரி நிகழ்த்திய அந்த பூஜை சடங்கில் காதலி என் அசொல்லப்படும் ரியா இடம்பெறவில்லை .பூசாரி சுஷாந்த் சடங்குகளைச் செய்யும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்றும் கூறினார்.