கி. வீரமணி - வைகோ  (கோப்பு படம்)
கி. வீரமணி – வைகோ (கோப்பு படம்)

ரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதிலிருந்து சில கேள்வி பதில்கள்:
எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் தற்போத நிறைய அணிகள் களத்தில் இருக்கின்றனவே?
கூட்டணி கிடைக்காமல் ஏமாந்தவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் போட்டியிலேயே இல்லை. பிரதான கட்சிகளான தி.மு.க.-  அ.தி.மு.க. இடையேதான் போட்டி.
தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி போன்ற அணிகளுக்கு வாய்ப்பு இல்லையா?
அவர்கள் எல்லாம் தங்களது கட்சிகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறார்கள். அவர்களது போட்டியை பொருட்படுத்தவேண்டியது இல்லை. அவர்களுக்கு போடும் ஓட்டு, செல்லாத ஓட்டுக்குச் சமம்.
தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவுடன் பின்வாங்ககிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது.
தேர்திலில் போட்டியிடவில்லை என்று வைகோ பின்வாங்கியிருக்கிறாரே?
சாதி மோதல் எனஅறு தேவையில்லாமல்  ஒரு பழியைப்போட்டு விலகியிருக்கிறார் வைகோ. அவரது செயல், ஆடத் தெரியாத நடன மாது, கூடம் சரியில்லை என்று சொல்வது போல இருக்கிறது.  கோவில்பட்டி தொகுதியில் அவரது நிலை என்னவென்று அவருக்குத் தெரிந்துவிட்டது.  யார் மீதாவது பழியைப் போடவேண்டும் என்று தி.மு.க. மீது பழியைப்போடுகிறார்.  இந்தத் தேர்தலில் பரிதாபத்துக்குரியவர் வைகோதான்.  இந்த முடிவு அவரது பொது வாழ்க்கையிலேயே நீக்க முடியாத கறை.
படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுகிறாரே..
தி.மு.க அறிவிப்பு எடுபட்டுள்ளதால் ஜெயலலிதாவிடம் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களால் ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.  அதனால்தான் மதுவிலக்கில் தனது நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிரிந்து சென்ற தி.மு.க.வும் – காங்கிரஸும் இப்போது கூட்டணி சேர்ந்துவிட்டார்களே?
இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரு மாநில அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை கலைஞர் செய்தார். ஆனாலும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை. ஆனாலும்கூட இன்றைய சூழலில் மக்கள் விரோத தமிழக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. எனவே இந்த ஆட்சியை அகற்ற தி.மு.க. – காங்கிரஸ்  ஒனஅறு கூடியிருக்கின்றன.

  • இவ்வாறு கி.வீரமணி பதில் அளித்துள்ளார்.