சென்னை: பொதுத்தேவை எழுத உள்ள 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.
கொரோனாவின் 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனப்டி, வாட்ஸ் அப்- ல் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்
வாட்ஸ் ஆப் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே குழுக்களை உருவாக்க வேண்டும்.
வாட்ஸ் ஆப் குழுவில் வினாத்தாள் அனுப்ப வேண்டும்.
விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
வாட்ஸ் ஆப் குழுவின் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், விடியோக்களை பதிவிடக் கூடாது.
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.