போபால்:

கொலை முயற்சி வழக்கு காரணமாக  மத்தியஅமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மகன் போபால் காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில்,  மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலின் மகன் பிரகலாட் படேல், 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த 50 வயதான ஈஷ்வர் ராய், மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக  பாஜக எம்.பி ஜலம் சிங் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.

விசாரணையில், வன்முறைக்கு காரணம் மத்திய அமைச்சரின் மகன் என்றும்,  அவருடன் இருந்தவர்கள் தான் முதலில் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிய வந்தது. இந்த வன்முறை சம்பவத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், தற்போது அமைச்சர் மகன் பிரபால் படேல் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள்மீத கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு காரணம் மணல்கொள்ளை என்று கூறப்படுகிறது.