டில்லி

ந்திய அரசு ஓட்டுனர் உரிமம் பெற எவ்வித கல்வித் தகுதியும் இனி  தேவை இல்லை என அறிவித்துள்ளது

நாட்டில் சொந்த உபயோகத்துக்கு மட்டும் அன்றி ஓட்டுனர் பணிக்கும் ஓட்டினர் உரிமம்தேவைப்படுகிறது/ இந்த ஓட்டுனர் உரிமம் பெற இந்திய அரசு பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறி இருந்தது.

அந்த விதிமுறைகளில் ஓட்டுனர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வியாக எட்டாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும் என்பதாகும். இன்று ஓட்டுனர் உரிமம் பெற விதிகளை மத்திய அரசின் சாலை போக்குவத்து அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின் படி ஓட்டுனர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி ஓட்டுனர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவி இலை என தெரிவித்துள்ளது