சென்னை: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டரில் சென்றபடி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து இந்த சாலையானது, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை  சுமார் ரூ.17,000 கோடியில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பசுமைவழிச் சாலை திட்டத்தால், இரு நகரங்களுக்கு இடையேயான பயணம் மிக விரைவானதாக இருக்கும் என்று  கூறப்பட்டது.  அதன்படி, பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  . பெங்களூரு – சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நேரில் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பட்டீலும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிதின் கட்கரி,  இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கும் என்றவர்,  இதற்கான பணிகள் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும்  என்றார்.