சென்னை: நாளை மீண்டும் கொரோனா தடூப்பூசி ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி,  ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த தடுப்பூசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

முன்னதாக, தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2ந்தேதி அன்று  தமிழகத்தில் இன்று  17 இடங்களில்முதல்கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை  நடைபெற்றது. இது வெற்றி பெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த  நிலையில், 2வது கட்ட தடுப்பூசி சோதனை நாளை (8ந்தேதி)  நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை , டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.