டெல்லி:  உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்தியஅரசு உறுதி செய்யும் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாது என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. இதனால் உக்ரைன் ரிட்டன் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவிபுரியுறுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை பரிசிலிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றார்

இதையடுத்து,  உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரிய வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியது. . பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.