டில்லி:  மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள  டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பதவி நீக்கம்  செய்ய வேண்டும் உச்சநீதிமன்ற்ததில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியதுடன் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி ஒதுங்கிக்கொண்டது.

கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டிருந்ததார். சுமார் 40 நாள் சிறைவாசத்துக்கு பிறகு, அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அவர் சரணடைந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை,  டில்லி முதல்வர்  பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”டில்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.