திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது என 2வது முறையாக ஆய்வுக்கு வந்துள்ள  மத்திய ஆய்வுக்குழு மீண்டும் பாராட்டு தெரிவித்து உள்ளது.

கடந்த டிசம்பர் 17 முதல் 18ஆம் தேதி வரை  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில்  வரலாறு காணாத அதிக கன மழை பெய்தது. அதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியதால் அணைகளில் இருந்து உபரி நீர்  தாமிரபணியில் வெளியேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி காட்டாற்று வெள்ளம் காரணமாக பொது மக்களின் வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் பெருமளவில் சேதம் அடைந்தது. வரலாறு காணாத இந்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று மத்தியஅரசு அதிகாரிகளைக் கொண்ட ஆய்வு குழுவை அனுப்பி வைத்தவர்.  தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர்கே.பி. சிங் தலைமையில் 7பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்தனர்.  இந்த மத்திய குழுவினர் நெல்லை, தூத்துக்குடி உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், டிசம்பர் மாதம் 20ம் தேதி மற்றும் 21ஆம் தேதிஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரையும் சந்தித்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும்,   இரண்டாவது முறையாக மத்திய குழுவினர்  தூத்துக்குடி மாவட்டத்தில்மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். விசைப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், உள்ளிட்ட தமிழக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதனை தொடர்ந்து இந்த மத்திய குழுவினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு நடத்தினர். ஒரு குழுவினர் விஜயகுமார் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கருத்த பாலம், ஆதிபராசக்தி நகர், ஓம் சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக இன்று  நெல்லை மாவட்டம் வந்த மத்திய குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் கருப்பந்துறை பகுதியில் சமீபத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நத்தம் தரைப்பாலம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது  பாராட்டு தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த முறை ஆய்வுக்கு வந்தபோதும், தமழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டிய மத்திய குழுவினர், தற்போது மீண்டும் பாராட்டியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.