சென்னை:  இன்று மாலை தீவுத்திடலில் சென்னை சங்கமம் விழா தொடங்குகிறது.  விழாவினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழா இன்முதல்  5 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

சென்னை தீவுத்திடல் அரங்கில் இன்று (13/01/2024) மாலை 6.00 மணிக்கு, 40 வகையான கலைகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து,சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு (14/01/2024 முதல் 17/01/2024 வரை) கலை விழாக்கள் நடைபெறவுள்ளது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 18 இடங்களில் நடைபெறுகிறது.  இந்த விழாவை இன்று மாலை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீவுத்திடலில் தொடங்கி வைக்கிறார்.  அதனைத் தொடர்ந்து, 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் இந்த கலை விழாக்கள் நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரும்பான்மை மக்களின் வரவேற்பு பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னையோடு சேர்த்து காஞ்சிபுரம், மேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவினை நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாகச் சென்னையில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா பிரம்மாண்டமாக  இன்று தொடங்குகிறது. தொடர்ந்து,  சென்னையில் 18 இடங்களில் இந்த கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், அம்பத்தூர், வளசரவாக்கம், ராயபுரம், கொளத்தூர், தீவுத்திடல், பெரம்பூர், மயிலாப்பூர், செம்மொழி, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தி நகர், எழும்பூர், கோயம்பேடு, அண்ணா நகர், கே.கே நகர் உள்ளிட்ட 18 இடங்களில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது.

சென்னை வாழ் மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் அறிந்து கொள்வதற்காகவும், நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் கண்டுகளிக்க ஏதுவாகவும், நாட்டுப்புற கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இவ்விழா நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.