சென்னை: பள்ளி பாடப்புத்தகங்களில் மத்தியஅரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவரான திண்டுக்கல் லியோனி தெரிவித்த உள்ளார்.

திமுகவின் நட்சத்திர பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனினை கடந்த அண்டு ஸ்டாலின் தலைமையிலான  தமிழகஅரசு  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமனம் செய்து கவுரப்படுத்தியது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லியோனி , மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும் என்றும், சமசீர் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களிக் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் எனவும் கூறினார்.

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்ட நிலையில், ஒரு வார்த்தையை மாற்றுவதற்காக மீண்டும் புத்தகங்கள் அச்சிடப்பட்டால் பலகோடி ரூபாய் வீணாகும் என தெரிவிக்கப்பட்டது.  தற்போதை நிதிச்சூழலில் அது மேலும் சிக்கலை எழுப்பும் என கல்வித்துறை ஆர்வலர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த லியோனி,  பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தம் செய்தல் போன்ற மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் கிடையாது. பாடப்புத்தகங்களில் திருத்தம் இருந்தால் 2023-24ம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்புள்ளது என கூறினார்.

ஏற்கனவே திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாடநூல் நிறுவனத் தலைவர் பதவி கொடுத்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? என்றும்  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.