சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சாலைகளை பராமரிக்க, சுங்கச்சாவடிகள் வைத்து பணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்படும் நிலையில், அதை வசூலிக்கும் வகையிலும், தொடர்ந்து சாலைகளை பராமரிக்கும் வகையிலும், அந்த வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் மூலம்,  தேசிய நெடுஞ்சாலைகள் போடுவது, விரிவாக்கம் செய்வது மற்றும் பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்வது ”தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்” மேற்கொள்ள வேண்டும்.  இந்த பணிகளை செய்ய  தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு, சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கம் வசூலிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு சுங்கசாவடியிலும் ஒரு ஆம்புலன்ஸ், கழிவறை உள்பட சில வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  மேலும், சுங்கக்கட்டணம் வசூலிக்கம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் பராமரிப்பிற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இவர்கள் தங்கள் பொறுப்புக்களை சரியாய் செய்கிறார்களா?  அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 55 சுங்கச்சாவடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவ்வாக  சுங்கச்சாவடிகள் குறிப்பிட்ட தொலைவிற்கு இடையில் அமைக்கக்கூடாது எனும் விதியும் உள்ளது.  ஆனால், மத்திய அரசு  முறையாக பின்பற்றப்படுவதில்லை. சென்னையின் அருகிலேயே 5 கிமி தொலைவிற்கிடையில் 2 சுங்கச்சவடிகள் உள்ளன. இதன்மூலம் மக்கள் பணத்தை மத்தியஅரசு பிடுங்கி வருகிறது.  அதுபோல, சுங்கக்கட்டணம் மூலம் வசூலிக்கப்படும் பணம், முதலீட்டை எட்டினால் அதன்பிறகு வசூலிக்கக்கூடாது என விதி உள்ளது. ஆனால், அதை எந்தவொரு நிறுவனமும் மேற்கொள்வது இல்லை. எமாந்தோர் இரண்டிலும் கட்டணம் செலுத்துவர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிக்ள் மூலம் முதலீட்டை விட பல மடங்கு லாபம் எடுத்த பின்பும் தொடர்ந்து வசூலை நிறுத்தியதில்லை மாறாக கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,

தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வரும் பெங்களூரு-சென்னை விரைவு சாலையில்,  

  1. ஸ்ரீபெரும்புதூர்
  2. மொளசூர்
  3. கோவிந்தவாடி
  4. பாணாவரம்
  5. மேல்பாடி
  6. வசந்தபுரம்

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை:

7. கெங்கராம்பாளையம்(விழுப்புரம்)
8. கொத்தட்டை(கடலூர்)
9. ஆக்கூர் பண்டாரவாடை(மயிலாடுதுறை)

10. விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள் (10, 11,12)

13. ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள் (13, 14, 16)

16.சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள் ( 16, 17, 18)

19 மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் (19, 20)

என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளது