டெல்லி: நாடாளுமன்றத்தில் முதன்முறையாக டிஜிட்டல்  பட்ஜெட்டை வாசித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உலக பொதுமறையான, திருவள்ளுவரின், திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இன்றைய பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், தமிழகத்திற்கு சில திட்டங்களை மட்டுமே அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு…

சென்னையில் ரூ.63,246 கோடியில்  119 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல்பூங்கா ஏற்படுத்தப்படும்

சென்னை, கொச்சி உள்பட 5 நகரங்களில் மின்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில 3500 கி.மீட்டர் தொலைவு தேசிய நெடுஞ்சாலை திட்டம். அதற்காக ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு

மதுரை கொல்லம் இடையே பொருளாதார மண்டல வழித்தடம். அதற்கான கட்டுமாணப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் புதிய புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்

ஆகிய திட்டங்கள் இன்றைய பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.