நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது.

எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள மேஜைகள் மீது எகிறி குதித்து ஓடிய அவர்களை எம்.பி.க்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால் நாடாளுமன்றத்தில் இருந்த எம்.பி.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்

இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்ற தினத்தில் இன்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பதை அடுத்து தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கேள்விக்குரியதாக்கி உள்ளது.