திருவனந்தபுரம்:

நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது என்று ஒய்வுபெற்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. ஜனநாயகம் இல்லை என்று குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளத்தது துரதிஷ்டவசமானது. நீதிபதிகள் அவர்களுக்கு இடையிலான பிரச்சனையை அவர்களே ஆலோசித்து சரி செய்துக் கொள்ள வேண்டும்.

நீதித்துறை என்பது மக்களின் புனிதமான இடம். இத்தகைய சூழ்நிலைகள் நீதித்துறையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். இது நடக்கக்கூடாது’’ என்றார்.