வஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசத்துரோக வழக்கில் கைதாகி விடுதலையான பிறகு முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊரான பீகார் மாநிலத்திலுள்ள பெஹுசராய் சென்றிருக்கிறார்.
அந்த ஊரில் உள்ள அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புகழ்பெற்ற கவிஞர்  ராம்தாரி சிங் தினகர் தின்கரின் சிலைக்கும் மாலை அணிவித்தார்.

அம்பேத்கர், கவிஞர் ராம்தாரி சிங் தினகர் தின்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் கன்னையா குமார்
அம்பேத்கர், கவிஞர் ராம்தாரி சிங் தினகர் தின்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் கன்னையா குமார்

இதனால் தின்கரின் சிலைக்கு தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, ஏபிவிபி மற்றும் பஜ்ரங்கள் அமைப்புகள் இணைந்து  கங்கை நீரை தெளித்தனர்.
அப்போது அவர்கள்,  “தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னையாகுமார் தொட்டதால், சிலை தீட்டுப்பட்டவிட்டது” என்று ஆக்ரோஷமாக  முழக்கமிட்டனர். கங்கை தீர்த்தத்தை தெளித்ததின் மூலம் தின்கரின் சிலைக்கு ஏற்பட்டிருந்த தீட்டு போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
"தீட்டு" கழிக்கும் ஏபிவிபி
“தீட்டு” கழிக்கும் ஏபிவிபி

அம்பேத்கர் பற்றி அனைவருக்கும் தெரியும்.    ராம்தாரி சிங் தினகர் பற்றி தெரிந்துகொள்வோம். இவர்,  இந்தியின் புகழ் பெற்ற கவிஞர்.  உணர்ச்சிகரமாக கவிதைகள் எழுதி, மக்களை சுதந்திர போராட்டத்துக்கு தூண்டியவர்.  தேசியக் கவி என்று போற்றப்படுபவர்.  விடுதலைப் போராட்டத்திற்காக துவக்கத்தில் புரட்சிகர பாதையை தேர்ந்தெடுத்தார். பிறகு காந்தியவாதியாக மாறினார்
நாடாளுமன்றத்தில் அவருடைய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷண் விருது பெற்றவர். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
இன்னொரு தகவல்: ஏ.பி.வி.பியினர் அம்பேத்கர் சிலைக்கு “தீட்டு” கழிக்கவில்லை.