நியூயார்க்

தூய்மை இந்தியா என பிரகடனப்படுத்தப் படும் இந்தியாவில் இன்னும் மனிதனால் கழிவுகள் அகற்றப் படுவது நிறுத்தப்படவில்லை என ஐ நா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியால் கடந்த 2014ஆன் ஆண்டு அறிவிக்கப் பட்ட தூய்மை இந்தியா திட்டத்தினால் இந்தியா விரைவில் உலகத்தின் மிக தூய்மையான நாடுகளில் ஒன்றாகி விடும் என மத்திய அரசால் பிரசாரம் செய்யப்படுகிறது.  இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதாரத் துறை கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஐ நா தனது அறிக்கையில்,  “இந்தியா மிகத் தூய்மையான நாடுகளின் பட்டியலில் வர முடியாத நிலையில் உள்ளது.   தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கழிவுகள் பல இடங்களில் மனிதர்களால் அகற்றப்படுகின்றன.    மனிதனால்  கழிவுகள் அகற்றப்படும் எந்த் ஒரு நாடும் மிகத் தூய்மையான நாடு என தன்னை சொல்லிக் கொள்ள முடியாது.   இந்தியாவால் இன்னும் இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை.   இது மனித நேயத்துக்கு எதிரானது” என கூறி உள்ளது.

அந்த அறிக்கையில் தற்போது கட்டப்பட்டுள்ள எந்த ஒரு கழிவறையிலும் கழிவுகள் தானே செல்ல வழியின்றி அது செப்டிக் டாங்கில் சேரும் முறையில் இருப்பதையும்,   அதை சுத்தம் செய்ய தாழ்ந்தா சாதியை சேர்ந்தவர்களை சில வேளைகளில் வறுப்புறித்தி செய்யச் சொல்வதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.    அது மட்டுமின்றி பல கழிவறைகளில் தேவையான அளவு தண்ணீர் வசதியும் இல்லை என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இவைகள் எல்லாம் தவறாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பால் சொல்லப்பட்டதாகவும் உண்மையானது இல்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளது.