சென்னை

ராஜிவ் காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.

கடந்த 1991ஆம் வருடம் மே மாதம் 21ஆம் தேதி ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.   அவருடன் காவல் துறையினர் உட்பட பலர் மரணம் அடைந்தனர்.  இந்த வழக்கில் 9 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.   அதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.   உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த பின் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது.

தற்போது பல வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்ததால் தன்னை விடுதலை செய்யுமாறு நளினி மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.  அதில், ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளை சட்டப் பிரிவு 161ன் கீழ் முன்கூட்டியே விடுதலை அரசு மாநில அரசுகளுக்கு உள்ளது.   இதை ஏற்கனவே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.   அதனால் என்னை முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்”  என நளினி கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையால் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது.   அந்த பிரமாணப் பத்திரத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அதனால் நளினியை  முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.