கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிரிய அரசு வடமேற்கு இட்லிப் பகுதியில் நடத்திய விஷவாயு தாக்குதலுக்காக ஐநா அந்நாட்டுக்கு கடும் கண்டனம் விதித்திருக்கிறது.
syria
சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மோசமான உள்நாட்டுப் போர் நடந்து வருகிரது. அங்கு ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் போரிட்டு வருகின்றன.
இப்போரில் கடந்த ஆண்டு சிரியா வடமேற்கு இட்லிப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுகளை வீசி தடைசெய்யப்பட்ட குளோரின் வாயுவை பரப்பி தாக்குதல் நடத்தி உள்ளதை 13 மாதங்கள் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் உறுதிப்படுத்திய ஐ.நா அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்நாடு நடத்திய மூன்றாவது விஷவாயு தாக்குதல் ஆகும்.
குளோரின் வாயுவை ஆயுதமாக பயன்படுத்துவதை 1997 ஆம் ஆண்டின் வேதி ஆயுத உடன்படிக்கை தடை செய்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து சிரியாவும் ஒரு அங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.