ரஷ்யா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை உக்ரைன் அரசு நிறுத்திவைத்துள்ளது.

கோதுமை மற்றும் மெஸ்லின் எனும் கோதுமை மற்றும் கம்பு கலந்த தானியம் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி உரிமங்களை உக்ரைன் அரசு ரத்து செய்துள்ளதாக விவசாயக் கொள்கை மற்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி கோதுமை உற்பத்தி நாடுகளில் ஒன்றான உக்ரைன் அந்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமையில் 10 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

தற்போது ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் சோமாலியா, எகிப்து உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும் பெருமளவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதில் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் மொத்த கோதுமை தேவைக்கு உக்ரைன் மட்டுமே நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.