கீவ்

க்ரைன் ஆளில்லா விமானம் ஒன்று கிரீமியா பகுதியில் உள்ள வெடிபொருள் கிடங்கு மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.  இந்த போரை நிறுத்த உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்து தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.

சுமார் ஓராண்டுக்கு மேலாகப்  போர் தீவிரமடைந்து உள்ள சூழலில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்யா தாக்கி உள்ளது எனச் சமீபத்தில் உக்ரைன் குற்றச்சாட்டு கூறியது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடிபொருள் கிடங்கு மீது உக்ரைனின் ஆளில்லா விமானம் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது.  இந்த வீடியோ வெளியாகி உள்ளது.  கிரிமீயாவின் மைய நகரான ஒக்தியாபிரிஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்குச் சற்று தொலைவிலிருந்து கரும்புகை வான் வரை கிளம்பிச் சென்றது.

ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த கிடங்கின் தலைவரான செர்கே ஆக்சியோனோவ்,

“ஆளில்லா விமானம் ஒன்று வெடிபொருள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது.  , அதனைச் சுற்றி 5 கி.மீ. தொலைவில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்ற வேண்டிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாகப் பல ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன

எனக் கூறியுள்ளார்.

சி என் என் இந்த தகவலை. வெளியிட்டு உள்ளது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.