புதுடெல்லி: ‘பசு அறிவியல்’ தொடர்பாக மாணாக்கர்களின் அறிவை சோதிப்பது தொடர்பாக தேசியளவிலான கட்டாய ஆன்லைன் தேர்வுக்கான சுற்றிக்கையை, நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அனுப்பியுள்ளதற்கு, பல்வேறு அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்புகள் விமர்சித்துள்ளன.

அதாவது, மத்திய அரசு, போலி மருத்துவத்திலிருந்து, அறிவியலை வித்தியாசப்படுத்த யுஜிசி விரும்பவில்லை என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

அவர்கள் தரப்பில் கூறியுள்ளதாவது, “சூரிய சக்தியை கிரகிக்கும் வகையில் இந்தியப் பசுக்களுக்கு இருக்கும் சிறப்பு ஆற்றல் குறித்து விளக்கமளிப்பது, இன்னும் அதிக சத்தான பாலை பெறுவது உள்ளிட்டவகைளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிவியல் மனப்பான்மை மற்றும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் கல்வி நிறுவனம், நவீன கல்வியை நாடெங்கும் பரப்ப வேண்டும். அதற்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு ஆதரவாக, அதன் முன்னால் மண்டியிடக்கூடாது. இதுவொரு ஆபத்தான அறிகுறி. இதன்மூலம், நாட்டில் அறிவியல் மற்றும் கல்வியை இணைத்துச் செல்வது சாத்தியப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.