டில்லி

ன்று  பிரதமர் மோடி, , சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைத் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

=கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னையில் இப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டில்லி சென்றார்.

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று பிற்பகல் பிரதமர் மோடியைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருவரையும் கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.