பூரி

இந்து மதத் தலைவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் பிரதமர் மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜகத்குரு ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட 4 பீடங்களில் பூரி சங்கராச்சாரிய பீடமும் ஒன்றாகும்.   இது ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ளது,  இங்கு 145 ஆம் மடாதிபதியாக ஸ்ரீ நிச்சலானத சரஸ்வதி பதவி வகித்து வருகிறார்.  இவர் இந்து மதத் தலைவர்களில் முக்கியமானவர் ஆவார். 

வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கின் போது பிரதமர் மோடி ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய உள்ளார்.  இதற்குப் பூரி சங்கராச்சாரியார் ஸ்ரீ நிச் சலானந்த சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர், 

”ராமர் கோவில் குடமுழுக்குக்காக நான் அயோத்தி செல்லப் போவதில்லை.  ஏனெனில் அங்குப் பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்  அவர் ராமர் சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்யும் போது நானும் சென்று கைகளைத் தட்டி கொண்டாட வேண்டுமா? என்னால் அது முடியாது” 

என்று தெரிவித்துள்ளார்.